கோர குருசினில் தொங்கினீரே
பாவி என்னை நீர் மீட்டிடவே
எனக்காய் சிலுவை சுமந்தீரே
உமக்காய் வேதம் சும்ப்பேனே
உம் இரு கைகளிலும் ஆணிகள்
என்னை நீர் அணைப்பதற்காகவே
உம் சிரசினில் முள் முடிகள்
என்னை நீர் நினைத்துப் பார்க்கவே
இரத்தம் தோய்ந்த நிலையில் பார்க்கும் போது
என் கண்ணில் கண்ணீர் வடியுதப்பா
உம் முதுகில் சாட்டை அடிகளோ
என்னை நீர் தோளில் சுமக்கவே
உம் விலாவில் ஈட்டியால் குத்தினரே
என் சரீர காயங்கள் ஆற்றிடவே
இரத்தம் தோய்ந்த நிலையில் பார்க்கும் போது
என் கண்ணில் கண்ணீர் வடியுதப்பா
உழப்பட்ட நிலம் போல் ஆனீரே
நான் அழகாய் இருக்கவே
எல்லாம் முடிந்து என்று சொல்லி
எனக்காக ஜீவனை விட்டுக்கொடுத்தீர்
இரத்தம் தோய்ந்த நிலையில் பார்க்கும் போது
என் கண்ணில் கண்ணீர் வடியுதப்பா